முன்பை விட அதிக ரேன்ஜ்.. விரைவில் இந்தியா வரும் ஏத்தர் புது வேரியண்ட்கள்.. வெளியான சூப்பர் தகவல்!

By Kevin Kaarki  |  First Published Apr 27, 2022, 3:01 PM IST

இரண்டு புது வேரியண்ட்களும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படுகிறது.


ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் இரண்டு புது வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக திட்டமிட்டு வருகிறது. இரு வேரியண்ட்களில் ஒறு மாடல் பெரிய பேட்டரி பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பெரிய பேட்டரி கொண்ட மாடல் என்பதால் இது அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கும். 

இரண்டு வேரியண்ட்கள்:

Latest Videos

undefined

இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீடு பற்றிய விவரங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் இரண்டு புது வேரியண்ட்களும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படும் என தெரிகிறது.

தற்சமயம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களில் ஏத்தர் 450X பிரீமியம் வேரியண்ட் ஆகும். இரண்டு புது வேரியண்ட்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், ஒரு வேரியண்ட் மட்டும் அளவில் பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

புது அப்டேட்:

மற்றொரு மாடல் ஏத்தர் 450X மாடலை தழுவிய ஸ்போர்ட் அம்சங்கள் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. சமீபத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450 பிளஸ் மற்றும் ஏத்தர் 450X மாடல்களுக்கு புது OTA அப்டேட் வெளியிட்டது. புது அப்டேட் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் இகோ (SmartEco) ரைட் மோடினை வழங்கி இருக்கிறது.  

மிக எளிமையான OTA அப்டேட் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்திறன், யூசர் இண்டர்பேஸ் மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த முடியும். இவ்வாறு செய்ய அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு நேரில் செல்லவோ, ஸ்கூட்டர்களை எடுத்து செல்லவோ எந்த அவசியமும் இல்லை. முன்னதாக பலமுறை OTA அப்டேட்களை வெளியிட்டு, ஸ்கூட்டர்களில் புது அம்சங்களை ஏத்தர் எனர்ஜி வழங்கி இருக்கிறது.

click me!