புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மற்றும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய டைகர் 1200 மாடலுக்கான டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. அதன் படி புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போது டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் டீசரில் இடம்பெறவில்லை.
புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தொடங்கியது. சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் ரேலி மற்றும் GT என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையிலும் டிரையம்ப் டைகர் 1200 இரு வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
இரண்டு வேரியண்ட்கள்:
இரு வேரியண்ட்களில் டிரையம்ப் டைகர் 1200 GT ஆஃப்-ரோடு சார்ந்த டூரிங் மாடல் ஆகும். இதன் ரேலி மாடல் ஆஃப் ரோடு பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டைகர் 1200 GT மாடலில் 19 இன்ச் முன்புற அலாய் வீல்கள், பின்புறம் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ரேலி மாடலில் முன்புறம் 21 இன்ச், பின்புறம் 18 இன்ச் கிராஸ் ஸ்போக் டிசைன் கொண்ட வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
என்ஜின் மற்றும் செயல்திறன்:
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடலில் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 1,160 சிசி, இன்-லைன், 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பின்புற வீலுக்கு ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் மூலம் பவர் அனுப்பப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மற்றும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். விலையை பொருத்தவரை புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் ரூ. 20 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.