ரூ. 8499 விலையில் புது மைக்ரோமேக்ஸ் போன் அறிமுகம் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 26, 2022, 4:50 PM IST

புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட்  சார்ஜிங் கொண்டிருக்கிறது.


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டிராப் நாட்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், மாலி G32 GPU, 3GB ரேம், 32GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட்  சார்ஜிங் கொண்டிருக்கிறது. மேலும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

மைக்ரோமேக்ஸ் இன் 2C அம்சங்கள்:

- 6.52- இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 டிராப் நாட்ச் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 3GB LPDDR4x ரேம்
- 32GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு  11
- 8MP பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2MP டெப்த் சென்சார்
- 5MP செல்பி கேமரா, f/2.2
- பின்புறம் கைரேகை சென்சார் 
- பேஸ் அன்லாக் 
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மே 1 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

click me!