புதிய ஐயோனிக் 5 ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்கேட்போர்டு பிளாட்பார்ம் E GMP-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகன பிரிவை நீட்டிக்கும் திட்டத்தின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐயோனிக் 5 மாடலை காட்சிப்படுத்திய போது, இதன் இந்திய வெளியீட்டை ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்த மாடலின் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவித்து உள்ளது. மேலும் 2028 ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது.
undefined
முழுமையான எலெக்ட்ரிக் CUV மாடலான ஐயோனிக் 5 ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்கேட்போர்டு பிளாட்பார்ம் E GMP-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. கூர்மையாக, அசத்தலான டிசைன் கொண்டிருக்கும் ஐயோனிக் 5 மாடலின் உள்புற கேபின் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சான்று:
"ஐயோனிக் 5 மாடலுக்காக உலகின் சிறந்த கார் மாடல் என்ற விருதை பெறுவதில் ஹூண்டாய் பெருமை கொள்கிறது. இது சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு எங்களின் குறிக்கோள் மற்றும் முயற்சிகளுக்கு எடுத்துக் காட்டாக இந்த விருது அமைகிறது. 2028 ஆண்டிற்குள் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதோடு, ஐயோனிக் 5 CY2022 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்," என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான யுன்சோ கிம் தெரிவித்தார்.
செயல்திறன்:
புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 2WD மற்றும் AWD வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 2WD மாடலில் ரியர் ஆக்சில் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 217 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் AWD மாடலில் உள்ள மோட்டார் 305 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரின் 2WD மற்றும் AWD வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 451 கிலோமீட்டர் மற்றும் 430 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.