வேற லெவல் சலுகைகள்... மிக குறைந்த விலையில் கிடைக்கும் இயர்பட்ஸ்.. அமேசான் அதிரடி!

By Kevin Kaarki  |  First Published Apr 26, 2022, 4:23 PM IST

சிறப்பு விற்பனையில் போட், சோனி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் இயர்பட்ஸ் மாடல்களை மிக குறைந்த விலையில், அதிக சலுகைகளுடன் வாங்கிட முடியும்.

.


ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்த பலரும் தற்போது வயர்லெஸ் ஹெட்போன் அல்லது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மிக குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. இந்த நிலையில், அமேசான் மெகா மியூசிக் ஃபெஸ்ட் சேல் விற்பனையை அறிவித்து இருக்கிறது. 

இந்த சிறப்பு விற்பனையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் போட், சோனி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் இயர்பட்ஸ் மாடல்களை மிக குறைந்த விலையில், அதிக சலுகைகளுடன் வாங்கிட முடியும். 

Tap to resize

Latest Videos

சோனி WF-1000XM4 மாடல் தற்போது ரூ. 19 ஆயிரத்து 990 விலையில் கிடைக்கிறது. இதன் பிடிரான் பேஸ்பட்ஸ் ஜேட் கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் விலை ரூ. 1499 விலையில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 299 ஆகும். 

போட் ஏர்டோப்ஸ் 121v2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு அமேசான் சிறப்பு விற்பனையில் 57 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 1,299 விலையில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 990 ஆகும். பி டிரான் பாஸ்பட்ஸ் ஜேட் கேமிங் இயர்போனுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹெட்போன் ரூ. 1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 3 ஆயிரத்து 699 ஆகும்.

சோனி WF 1000XM4 ப்ளூடூத் 5.2 இயர்பட்ஸ் உண்மை விலை ரூ. 24 ஆயிரத்து 990 ஆகும். எனினும் சிறப்பு விற்பனையில் இந்த இயர்போன் ரூ. 19 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எல்.ஜி. டோன் ஃபிரீ FP5 மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலையில் ரூ. 9 ஆயிரத்து 990 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10 ஆயிரத்து 990 விலையில் கிடைக்கிறது.

சோனி WF-C500 மாடலின் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

click me!