Xiaomi Pad 5: சீன சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் ஃபிளாக்ஷிப் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இதே நாளில் சியோமி பேட் 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என சியோமி அறிவித்து இருக்கிறது. மேலும் இதற்கான டீசரையும் வெளியிட்டு உள்ளது.
டீசரின் படி புதிய சியோமி பேட் 5 மாடலில் ஸ்டைலஸ் சப்போர்ட், கீபோர்டு டாக் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. சீன சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் சியோமி பேட் 5 மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன்று இந்திய சந்தையிலும் சியோமி பேட் 5 மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
சியோமி பேட் 5 அம்சங்கள்:
- 11 இன்ச் 2560x1600 WQXGA 16:10 டிஸல்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10
- 2.96GHz ஆக்டா கோர் கவால்காம் ஸ்னாப்டிராகன் 860 7nm பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6GB LPDDR4X ரேம்
- 128GB / 256GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
- 13MP பிரைமரி கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி
- 8MP செல்ஃபி கேமரா, 1080p வீடியோ ரெக்கார்டிங் வசதி
- யு.எஸ்பி. டைப் சி ஆடியோ, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 8,720mAh பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மேலே உள்ள சிறப்பம்சங்கள் சியோமி பேட் 5 சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டதை சார்ந்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வேரியண்டில் அம்சங்கள் மாற்றப்படலாம். மேலும் இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 மாடல் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதன் விற்பனை நடைபெறும்.