OnePlus Nord Buds: டீசர் வந்துடுச்சு... அடுத்த வாரம் லான்ச் ஆகும் ஒன்பிளஸ் நார்டு பட்ஸ்..!

By Kevin Kaarki  |  First Published Apr 18, 2022, 4:15 PM IST

OnePlus Nord Buds: ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்  என ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில், ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடலின் வெளியீடு தற்போது  உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. நார்டு சீரிசில் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட் மாடலாக உருவாகி இருக்கும் நார்டு பட்ஸ் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி  மற்றும் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

அந்த வகையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்டு CE 2 லைட் 5ஜி, ஒன்பிளஸ் 10R மற்றும் ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் என மூன்று சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெளியீட்டு தேதியுடன் புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரையும் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

அசத்தல் டீசர்:

டீசரில் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில்  இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அளவில் பெரிய சார்ஜிங் கேஸ் காணப்படுகிறது. மேலும் இயர்பட்ஸ் இன்-இயர் ரக டிசைன் கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்பிலாஷ் ப்ரூஃப் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. டீசர் டேக்லைனில், நார்டு குடும்பத்தில் இருந்து நீங்கள் கேட்க விரும்பிய அனைத்தும்" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

போன்களை போன்றே ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் ப்ளிப்கார்ட் தளத்திலும் இது கிடைக்கும். ஆன்லைன் ஸ்டோர்களை தொடர்ந்து ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். புது இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். 

நார்டு இகோ-சிஸ்டம்:

"ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் நார்டு பிரிவில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். மேலும் நம்பத்தகுந்த பிராண்டு என்ற அடிப்படையில் குறைந்த விலையில், சிறப்பான ஒன்பிளஸ் அனுபவத்தை அனைவருக்கும் வழங்க நினைக்கும் எங்களின் குறிக்கோளை இதன் மூலம் அடைய முயற்சி செய்கிறோம்." என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

click me!