Redmi 10A: குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போன்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 18, 2022, 03:26 PM IST
Redmi 10A: குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போன்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

சுருக்கம்

Redmi 10A: சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி 10A ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 10A ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் ரெட்மி 10A ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

அதன்படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் குறைந்த அம்சங்கள் நிறைந்த வேரியண்ட் ஆகும்.

பிரத்யேக மைக்ரோசைட் விவரங்களின் படி புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, ஸ்மூத் பெர்ஃபார்மன்ஸ், EVOL டிசைன், சிறந்த கேமரா சென்சார்கள், சினிமேடிக் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 

ரெட்மி 10A எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.53 இன்ச் 720x1600 பிக்சல் HD+LCD டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர்
- PowerVR8320 GPU
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- 13MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5MP செல்ஃபி கேமரா
- 5000mAh பேட்டரி
-  10 வாட் சார்ஜிங் 
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், பாலிகார்போனேட் பில்டு
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

விலை விவரங்கள்:

புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 8 ஆயிரத்து 999 என துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்ளில் கிடைக்கும் என தெரிகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

200MP டெலிபோட்டோ.. பெரிய பேட்டரி.. AI அம்சங்களுடன் வரும் ஓப்போ ஃபைண்ட் X9
Indigo : பயணிகளுக்கு ரூ 10,000 மதிப்புள்ள வவுச்சர்கள்..! அவமானத்தை ஈடுகட்டும் இண்டிகோ நிறுவனம்..!