ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யாதீர்! அதிகரிக்கும் சிக்கல்..!

By vinoth kumarFirst Published Sep 14, 2022, 10:36 AM IST
Highlights

ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர். தனிப்பயனாக்கப்பட்ட அப்டேட்டுகள், கேமரா தெளிவுதிறன், ஸ்மார்ட்போனின் செயல்திறன் போன்றவை இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்படுகின்றன. 

ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர். தனிப்பயனாக்கப்பட்ட அப்டேட்டுகள், கேமரா தெளிவுதிறன், ஸ்மார்ட்போனின் செயல்திறன் போன்றவை இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல ஸ்மார்ட்போன்களில், அப்டேட்டுக்குப் பிறகு பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட்போன் பிராண்ட் என்று இல்லாமல், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிக்கல் வந்துள்ளதாக தெரிகிறது. 

இதையும் படிங்க;- iQOO: ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸருடன் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

குறிப்பாக ரெட்மி நோட் 10 பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்த பிறகு கேமரா வேலை செய்யவில்லை என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வருகின்றனர். தொடக்கத்தில் இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை தான் பெரும்பாலான டெக் யூடியூபர்கள் பாராட்டி தள்ளினர். 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன் என்று கூறப்பட்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ரெட்மி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள ரெட்மி சர்வீஸ் சென்டருக்குச் சென்று அப்டேட் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அப்டேட் குறைபாடுகள் காரணமாக, அடுத்த 2 மாதத்திற்கு எந்த அப்டேட்டும் செய்ய வேண்டாம் என்று டெக் வல்லூநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் கிரேட் இந்தியன் சேல் வரவுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கச் செய்யும் முயற்சியில் இத்தகைய அப்டேட் குறைபாடுகள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இதையும் படிங்க;- QR Codeஐ கவனக்குறைவாக பயன்படுத்தினால் உங்கள் பணம் அபேஸ்: SBI எச்சரிக்கை

click me!