ஏராளமான ஃபிட்னஸ் அம்சங்களுடன் புது சியோமி பேண்ட் 7 அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

By Kevin Kaarki  |  First Published Jun 23, 2022, 10:22 AM IST

வாட்ச் ஃபேஸ்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில், குறைந்த அளவு பேட்டரியை செலவு செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.


சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி பேண்ட் 7 பிட்னஸ் டிராக்கரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த நிலையில், சியோமி பேண்ட் 7 தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 100-க்கும் அதிகமான புது வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

இத்துடன் சில வாட்ச் ஃபேஸ்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில், குறைந்த அளவு பேட்டரியை செலவு செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட் பேண்ட் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்ளிங், ஸ்கேட் போர்டிங் மற்றும் பல்வேறு பயிற்சி செய்யும் போது உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் ஒவ்வொரு உடற்பயிற்சியின் போதும் இதய துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருத்தருக்கான உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்யும். பயனர்கள் அவர்களின் நண்பர்களுடன் தினசரி ஸ்டெப், கலோரி பயன்பாடு, ஆக்டிவிட்டி டைம் உள்ளிட்டவைகளில் சவால் செய்து போட்டி அடிப்படையில் ஊக்கம் அளிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி பேண்ட் 7 மாடலில் நாள் முழுக்க பயனரின் SpO2 அளவுகளை டிராக் செய்யும் வசதி உள்ளது. இத்துடன் ஆக்சிஜன் அளவுகள் 90 சதவீதத்திற்கும் கீழ் குறையும் போது வைப்ரேஷன் மூலம் எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 15 நாட்களுக்கான பேக்கப் கிடைக்கிறது.

சியோமி பேண்ட் 7 அம்சங்கள்:

- 1.62 இன்ச் 192x490 பிக்சல் HD 2.5D AMOLED டச் டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 5.2: ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐ.ஓ.எஸ். 10.0, அதன் பின் வெளியான புது ஓ.எஸ்.
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்சிஜன் சென்சார்
- 6-ஆக்சிஸ் மோஷன் சென்சார்
- 110-க்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள்
- ஹார்ட் ரேட் டிராக்கிங், SpO2 டிராக்கிங்
- ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப்ஷன்கள்
- 100-க்கும் அதிக புது பேண்ட் பேஸ்கள் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி
- 180mAh பேட்டரி

புதிய சியோமி Mi பேண்ட் 7 மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஐவரி, ஆலிவ், ஆரஞ்சு, புளூ, பிளாக், பின்க், மற்றும் புதிதாக நியான் கிரீன், நியான் ஆரஞ்சு, காக்கி கிரீன் மற்றும் காக்கி புளூ போன்ற நிற ஸ்டிராப்கள் கிடைக்கின்றன. இதன் விலை 52.4 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 ஆயிரத்து 100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

click me!