6000mAh பேட்டரியுடன் குறைந்த விலையில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்..!

Published : Jun 23, 2022, 09:25 AM IST
6000mAh பேட்டரியுடன் குறைந்த விலையில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்..!

சுருக்கம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி f13 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி f13 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ இன்பினிட்டி வி ஸ்கிரீன், எக்சைனோஸ் 850 பிராசஸர், 4GB ரேம், 4GB கூடுதல் விர்ச்சுவல் ரேம் பிளஸ், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச் செய்யக்கூடிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு சிம் கார்டில் நெட்வொர்க் கிடைக்காத பட்சத்தில் மற்றொரு சிம் கார்டிற்கு அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் செய்கிறது. இந்த அம்சம் முதன் முதலில் சாம்சங் கேலக்ஸி M53 ஸ்மார்ட்போனில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000mAh பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி f13 அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
- மாலி-G52
- 4GB ரேம்
- 64GB / 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 6,000mAh பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய சாம்சங் கேலக்ஸி f13 ஸ்மார்ட்போன் நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் மற்றும் வாட்டர்ஃபால் புளூ மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி f13 ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 

அறிமுக சலுகை விவரங்கள்:

புதிய சாம்சங் கேலக்ஸி f13 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை தேர்வு செய்யும் போது ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!