110 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jun 22, 2022, 6:28 PM IST
Highlights

புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலில் 2000 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 70v/40ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை நான்கு மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஈவ்ட்ரிக் ரைஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

நோக்கம்:

ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. லைட், டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் ஏற்கனவே பெட்ரோல் பைக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

“இன்றும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் மாடல்களுக்கு மாற தயங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமுள்ள அனுபவத்தை வழங்கும்,” என ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ் பாட்டில் தெரிவித்து இருக்கிறார். 

பல்வேறு நிறுவனங்கள் சமீப காலங்களில் புது எலெக்ட்ரிக் மாடல்களை இரு சக்கர வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

click me!