பில்ட் இன் ஸ்பீக்கர் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்... மாஸ் காட்டிய நாய்ஸ்..!

By Kevin KaarkiFirst Published Jun 21, 2022, 9:07 PM IST
Highlights

மேட் இன் இந்தியா ஸ்மார்ட் கிளாஸ் மாடல்களில் ஓபன் இயர் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது நேடிவ் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டுள்ளது. 

இந்தியாவை சேர்ந்த ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் உற்பத்தியாளரான நாய்ஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இறுக்கிறது. புதிய நாய்ஸ் i1 ஸ்மார்ட் கிளாஸ் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாய்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் நாய்ஸ் i1 ஸ்மார்ட் கிளாஸ் அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் கண்ணாடி ஆகும். 

புதிய ஸ்மார்ட் கிளாஸ் மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள், மல்டி-பன்ஷன் டச் கண்ட்ரோல்கள், மைக்ரோபோன் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. நாய்ஸ் i1 ஸ்மார்ட் கிளாஸ் லிமிடெட் எடிஷன் மாடல் என்றும் இது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என நாய்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

நாய்ஸ் i1 அம்சங்கள்:

புதிய நாய்ஸ் i1 மாடல் வழக்கமான வேஃபாரெர் டிசைன் கொண்டிருக்கிறது. இது சதுரங்கம் மற்றும் வட்டம் என இரண்டு வடிவ ஃபிரேம் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, புளூ லைட் பில்ட்டர் கொண்ட டிரான்ஸ்பேரண்ஸ் லென்ஸ்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள லென்ஸ்களை விருப்பம் போல் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

மேட் இன் இந்தியா ஸ்மார்ட் கிளாஸ் மாடல்களில் ஓபன் இயர் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது நேடிவ் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டுள்ளது. இதில் 16.2mm ஸ்பீக்கர் டிரைவர்கள் உள்ளன. ஸ்மார்ட் கிளாஸ்-இன் வலது புறத்தில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யூம் கண்ட்ரோல், பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது போன்ற அம்சங்களை கண்ட்ரோல் செய்யலாம். 

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி:

நாய்ஸ் i1 ஸ்மார்ட் கிளாஸ் மாடல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி என இருவித வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளையும் சப்போர்ட் செய்கிறது. இதை கொண்டு நாய்ஸ் ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் கிளாஸ் மேக்னடிக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு 90 நிமிடங்களில் ஸ்மார்ட் கிளாஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம். 

முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் i1 ஸ்மார்ட் கிளாஸ்-ஐ கொண்டு ஒன்பது மணி நேரம் பாடல்களை கேட்கலாம். கனெக்டிவிட்டிடுக்கு ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது. 

click me!