இணையத்தில் லீக் ஆன புது தகவல்.. நத்திங் போன் 1 இவ்வளவு தானா?

By Kevin KaarkiFirst Published Jun 21, 2022, 8:10 PM IST
Highlights

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 மாடலின் விலை விவரங்களும் இதே தகவலை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலை ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் போன் 1 மாடல் பற்றிய பல்வேறு விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி நத்திங் போன் 1 மாடலில் டிரான்ஸ்பேரண்ட் பேக் பேனல், ஏராளமான எல்.இ.டி., வயர்லெஸ் சார்ஜிங் காயில் மற்றும் பல்வேறு கனெக்டர்கள் உள்ளன. இந்த போன் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி நத்திங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், நத்திங் போன் 1 மாடல் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. நத்திங் போன் 1 மாடலின் விலை விவரங்களும் இதே தகவலை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. நத்திங் போன் 1 மாடலின் 6GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி வேரியண்ட் விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த விலைப் பட்டியலில் நத்திங் போன் 1 மாடல் ஒன்பிளஸ் நார்டு, ரியல்மி GT நியோ, ஐகூ நியோ மற்றும் போக்கோ F4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. நத்திங் போன் 1 மாடல் இந்திய சந்தையில் ஏற்கனவே வளர்ந்து இருக்கும் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

நத்திங் போன் 1 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி, டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட்கள், 5ஜி கனெக்டிவிட்டி, 6.5 இன்ச் அல்லது 6.6 இன்ச் OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு சார்ந்த நத்திங் ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!