520கி.மீ. ரேன்ஜ்... இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய எலெக்ட்ரிக் கார்... ஏன் தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 21, 2022, 6:20 PM IST

520கி.மீ. ரேன்ஜ்... இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய எலெக்ட்ரிக் கார்... ஏன் தெரியுமா?


BYD e6 மாடல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது. புதிய BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் ஆறு நாட்களில் 2 ஆயிரத்து 203 கிலோமீட்டர்களை கடந்து அசத்தி இருக்கிறது. இதில் டெல்லியில் துவங்கி மும்பை வரை மொத்தம் ஒன்பது நகரங்களை கடந்து சாதனை புத்தகத்தில் BYD e6 இடம்பெற்று இருக்கிறது.

பயணத்தின் போது BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் நான்கு மாநிலங்களில் உள்ள இகோ சென்சிடிவ் பகுதிகளை கடந்தது. இதுவரை BYD e6 மாடல் 4.7 கோடி கிலோமீட்டர்களை நிறைவு செய்து உள்ளது. இந்த பயணத்தின் மூலம் 4 லட்சத்து 13 கிராம் கார்பன் மாசை சேமித்து இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

சர்வதேச அளவில் அங்கீகாரம்:

இந்தியாவில் பிளேடு பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஆடம்பர எம்.யு.வி. என்ற பெருமையை BYD e6 பெற்று இருக்கிறது. இந்த தொழில்நுட்பம், அதன் பாதுகாப்பு, ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் சைக்கிள் போன்ற அம்சங்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் மற்றும் பெருமையை பெற்று இருக்கிறது. பேட்டரியில் லித்தியம் அயன் பாஸ்பேட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் தான் இத்தகைய பலன்கள் கிடைக்கின்றன. 

இந்திய சந்தையில் BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடலின் விலை ரூ. 29 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், BYD e6 எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடல் 5 சீட்டர் வாகனம் ஆகும். மேலும் இதனை வாடகை வண்டியாகவே பயன்படுத்த முடியும். இதனை தனி நபர் பயன்பாட்டுக்காக பதிவு செய்ய முடியாது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி:

அம்சங்களை பொருத்தவரை BYD e6 மாடலில் 93.67 பி.ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 71.7 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் வரை செல்லும். மேலும் BYD e6 மாடல் AC மற்றும் DC பாஸ்ட் சார்ஜிங் வசதிகளை சப்போர்ட் செய்கிறது.

click me!