World Motorcycle Day 2022: குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 மோட்டார்சைக்கிள் மாடல்கள்..!

By Kevin Kaarki  |  First Published Jun 21, 2022, 5:24 PM IST

World Motorcycle Day 2022: புது மோட்டார்சைக்கிள் வாங்க இருப்போர் என அனைவருக்கும் ஏற்ற வகையில் சிறந்த மோட்டார்சைக்கிள்கள் எவை என்ற பொதுவான கேள்விக்கு பதில் இதோ.


சரியான மோட்டார்சைக்கிளை தேர்வு செய்வது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரியும். ஆனால் நம்ம பட்ஜெட்டிற்கு இது சரியாக வருமா என யோசித்தால், சிறந்த மோட்டார்சைக்கிளை தேர்வு செய்யும் வேளையில் முக்கால்வாசி முடிந்து விடும். புது மோட்டார்சைக்கிள் வாங்கும் முன், நமது பட்ஜெட்டை முதலில் நிர்ணயம் செய்து விட்டால், அடுத்தடுத்து நமக்கான தேவை, பயன்பாடு, மைலேஜ், சர்வீஸ், ஸ்பேர் விலைவாசி போன்று அடுத்தடுத்த விஷயங்களில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். 

இன்று (ஜூன் 21) உலக மோட்டார்சைக்கிள் தினம் ஆகும். இந்த நாளில் புது மோட்டார்சைக்கிள் வாங்க ஏற்கனவே திட்டமிட்டோர், விரைவில் புது மோட்டார்சைக்கிள் வாங்க இருப்போர் என அனைவருக்கும் ஏற்ற வகையில் சிறந்த மோட்டார்சைக்கிள்கள் எவை என்ற பொதுவான கேள்விக்கு பதில் இதோ. இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். 

Tap to resize

Latest Videos

ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ்:

அதிக மைலேஜ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டிய ஒரே மோட்டார்சைக்கிள் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ். இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிள் டிரம் செல்ப் கேஸ்ட், i3s டிரம் செல்ப் கேஸ்ட் மற்றும் i3s டிரம் செல்ப் கேஸ்ட்  மேட் ஷீல்டு கோல்டு என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 69 ஆயிரத்து 380, ரூ. 70 ஆயிரத்து 700 மற்றும் ரூ. 71 ஆயிரத்து 700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

பஜாஜ் CT 110X:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 வாக்கில் தனது CT 100 மோட்டார்சைக்கிள் மாடலை அப்டேட் செய்து, CT 110X பெயரில் அதிக ரக்கட் வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 65 ஆயிரத்து 453, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தடிமனான கிராஷ் கார்டுகள், மோல்டு செய்யப்பட்ட ஃபூட்-ஹோல்டுகள் மற்றும் பின்புற கேரியர் போன்ற அம்சங்களை வழங்கி CT 110X மாடலை மிகவும் உறுதியானதாக மாற்றி இருக்கிறது.

ஹீரோ கிளாமர் 125:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்றும் ஓர் சிறந்த மாடல் ஹீரோ கிளாமர் 125. இந்த மாடலில் 124.7 சிசி பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.72 ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் இரு புறங்களிலும் டிரம் பிரேக்குகள் மற்றும் கம்பைன்டு ஸ்டாப்பிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. 

ஹோண்டா ஷைன்:

இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் மாடலின் விலை ரூ. 76 ஆயிரத்து 314 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 80 ஆயிரத்து 314 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஹோண்டா ஷைன் மாடல் 2006 ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல் என்ற பெருமையை பெற்றது. இந்த மாடலில் 124.7 சிசி என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 10.5 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டி.வி.எஸ். ரைடர்:

இந்திய சந்தையில் புதுவரவு மாடலான டி.வி.எஸ். ரைடர் முற்றிலும் வித்தியாசமான டிசைன் மற்றும் அசத்தல் அம்சங்களௌ கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங் 150சிசி மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது. டி.வி.எஸ். ரைடர் மாடலின் டிரம் வேரியண்ட் விலை ரூ. 84 ஆயிரத்து 573 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 90 ஆயிரத்து 989 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

click me!