ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு... குட் நியூஸ் கொடுத்த ரெட்மி..!

By Kevin Kaarki  |  First Published Jun 20, 2022, 9:43 PM IST

ரெட்மி நோட் 10s ஸ்மார்ட்போனிற்கு இந்திய சந்தையில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விலை குறைப்பின் மூலம் ரெட்மி நோட் 10S மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. 

ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட் உள்ளது. இத்துடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை அமேசான் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. விலை குறைப்பு மட்டும் இன்றி ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

புதிய விலை விவரங்கள்:

ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 498

ரெட்மி நோட் 10S அம்சங்கள்:

- 6.43 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் 
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU 
- 6GB LPDDR4X ரேம் - 64GB (UFS 2.2) / 128GB (UFS 2.2) மெமரி 
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி  
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 
- டூயல் சிம் ஸ்லாட்  
- 64MP பிரைமரி கேமரா, 0.7μm, f/1.79, LED பிளாஷ் 
- 8MP 118° அல்ட்ரா வைடு சென்சார் 
- 2MP டெப்த் கேமரா 
- 2MP மேக்ரோ கேமரா 
- 13MP செல்பி கேமரா, f/2.45 
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ 
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP52) 
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
- யுஎஸ்பி டைப் சி 
- 5000mAh பேட்டரி 
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன் மாடல் ஷேடோ பிளாக், பிராஸ்ட் வைட் மற்றும் டீப் சீ புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

click me!