800சிசி என்ஜினுடன் விரைவில் இந்தியா வரும் புது பைக்... சூப்பர் டீசர் வெளியிட்ட டுகாட்டி..!

By Kevin Kaarki  |  First Published Jun 21, 2022, 4:43 PM IST

ஸ்கிராம்ப்ளர் சீரிசில் ஸ்போர்ட் ப்ரோ, டார்க் ப்ரோ மற்றும் டிரிபியுட் ப்ரோ மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.


டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புது மாடல் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் வரிசையில் இணைந்து கொள்ளும். 

டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் விரைவில் வெளியீடு என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. ஓரமாக பொருத்தப்பட்டு இருக்கும் சிங்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் பாட் மற்றும் பீக் ஸ்டைல் மட்கார்டு உள்ளிட்டவைகளை கொண்டே இந்த மாடல் ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

Latest Videos

undefined

இந்திய வெளியீட்டு தேதி:

விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அரிவிக்கப்படவில்லை. ஸ்கிராம்ப்ளர் சீரிசில் ஸ்போர்ட் ப்ரோ, டார்க் ப்ரோ மற்றும் டிரிபியுட் ப்ரோ மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய அரன்பன் மோட்டார்ட் மாடலில் 803சிசி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் L-ட்வின், ஏர் கூல்டு யூனிட் ஆகும். 

என்ஜின் திறன்:

இந்த என்ஜின் 8250 ஆர்.பி.எம்.-இல் 73 ஹெச்.பி. பவர், 5750 ஆர்.பி.எம்.-இல் 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையிலும் இதே யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

வடிவமைப்பை பொருத்தவரை புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடல் டூயல் டோன் பெயிண்ட்- ஸ்டார் வைட் சில்க் மற்றும் டுகாட்டி GP'19 ரெட் கிடைக்கிறது. பீக் ஸ்டைல், ஹை-முன்புற மட்கார்ட் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மற்றும் கிராஃபிட்டி போன் கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. இதே போன்று முன்புற இருக்கை மற்றும் லோயர் சீட் அலுமினியம் ஹேண்டில் பார் உள்ளிட்டவை ஹைப்பர்மோட்டார்ட் RVE மாடலை போன்றே வழங்கப்படுகிறது.

click me!