Yoga Day 2022: இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த பிட்னஸ் டிராக்கர் மாடல்களின் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் ஸ்மார்ட் பேண்ட் மற்றும் பிட்னஸ் பேண்ட் மாடல்கள் மிகவும் பிரபலம். பல்வேறு பிராண்டுகள் பட்ஜெட் விலை ஸ்மார்ட் பேண்ட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிட்னஸ் டிராக்கர்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்திய சந்தையில் ஏற்பட்டு இருக்கும் தட்டுப்பாடு காரணமாக அதிகளவு பிட்னஸ் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் சர்வதேச யோகா தினத்தில் நீங்கள் வாங்க சிறந்த ஸ்மார்ட் பேண்ட் மாடல்களின் பட்டியலை தொகுத்து இருக்கிறோம். யோகா தினத்திற்கான ஸ்மார்ட் பேண்ட் மாடல்கள் அனைத்தும் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த பிட்னஸ் டிராக்கர் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஹானர் பேண்ட் 6:
இந்திய சந்தையில் ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஹானர் பேண்ட் 6 மாடலில் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.0, 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, IMU சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், ஹூவாய் ட்ரூசீன் 4.0 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், 10 ஓர்க் அவுட் மோட்கள் மற்றும் 180mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் பேண்ட்:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் AMOLED கலர் டச் ஸ்கிரீன், மெசேஜ் நோட்டிபிகேஷன், கால் நோட்டிபிகேஷன், ஹார்ட் ரேட் சென்சிங், SpO2 மாணிட்டரிங், ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங், 13 உடற்பயிற்சி மோட்கள், IP68 மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி மற்றும் 110mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
ஃபாஸ்ட் டிராக் ரிஃப்லெக்ஸ் 3.0:
நான்கு டூயல் டோன் டிசைன், ஃபுல் டச் கலர் டிஸ்ப்ளே, 20 பிரத்யேக பேண்ட் ஃபேஸ்கள், 24 மணி நேர ரியல் டைம் HR மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கர், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், போன் ஃபைண்டர், பத்துக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 495 ஆகும்.
ரியல்மி பேண்ட் 2:
இந்திய சந்தையில் ரியல்மி பேண்ட் 2 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சூப்பர் பிரைட் HD கலர் டிஸ்ப்ளே, SpO2 சென்சார், 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், ஹெல்த் மாணிட்டரிங், 50-க்கும் அதிக டையல் ஃபேஸ்கள், TFT LCD டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் ZEB-FIT4220CH:
ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் பேண்ட் மாடல்களில் 3.3cm TFT கலர் டிஸ்ப்ளே, 30-க்கும் அதிக பேட்டரி பேக்கப், காலர் ஐடி, 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக் கூடிய வாட்ச் ஃபேஸ்கள், ஏழு ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.