காப்புரிமையில் கசிந்த ரகசியம்... இணையத்தில் வெளியான பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள்..!

By Kevin Kaarki  |  First Published Jun 22, 2022, 9:58 PM IST

இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


சுசுகி இந்தியா நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர் பர்க்மேன் ஸ்டிரீட் மாடல். இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுசுகி தனது பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும், அதன் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாமலேயே இந்சது வந்தது. 

இந்த நிலையில், தான் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீக் எலெக்ட்ரிக் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வெளியாகி உள்ளது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் காப்புரிமை விண்ணப்ப வரைபடங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டிலும், அதன் பெட்ரோல் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

அண்டர் சீட் ஸ்டோரேஜ்:

இந்த ஸ்கூட்டரின் AC மோட்டார் ஃபிரேமின் முன்புறம் இருக்கையின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபுளோர்-போர்டின் உள்புறம் AC-DC மோட்டார் உள்ளது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடல் அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜுக்கு பெயர் பெற்ற ஒன்றாக இருந்து வந்தது. 

இந்த நிலையில், தற்போதைய காப்புரிமை வரைபடங்களின் படி சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வேரியண்டில் பேட்டரி வைக்கப்படுவதால், அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது. மேலும் DC-AC கன்வெர்ட்டர் பேட்டரி பேக் உள்புறம் வைக்கப்படுகிறது. 

முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

இந்த ஸ்கூட்டர் போட்டி நிறுவன மாடல்களை விட அதிக ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதன் விற்பனை துவங்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. 

தற்போதைய தகவல்களின் படி சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது சுசுகி இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெறும்.

click me!