இந்தியாவில் Xiaomi 13 Pro ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. செராமிக் ஒயிட், செராமிக் பிளாக் என இரண்டு நிறங்களில் வருகிறது. இதன் விலை மற்றும் ஆஃபர்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஷாவ்மி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Xiaomi 13 ப்ரோ கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
ஷாவ்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், Amazon, Mi Homes மற்றும் Mi Retail Partners மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் வரையிலான உடனடி தள்ளுபடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Xiaomi 13 Pro விலை:
Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனானது 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி என்ற ஒரே மாடலாக வருகிறது, இதன் விலை ரூ.79,999 ஆகும். இதுவரை வந்த ஷாவ்மி போன்களிலேயே இதுதான் மிக விலையுயர்ந்த Xiaomi ஃபோன் ஆகும். ஐசிஐசிஐ வங்கி கார்டு வைத்திருப்பவர்கள், ரூ.10,000 வரை ஆஃபர் பெறலாம். அதாவது Xiaomi 13 Pro போனை 69,999 ரூபாய்க்கு வாங்கலாம். Xiaomi அல்லது Redmi தவிர பிற ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் எக்ஸ்சேஞ்ச் முறையில் ரூ.8,000 ஆஃபர் பெறலாம். உங்களிடம் Xiaomi அல்லது Redmi ஃபோன் இருந்தால், சுமார் ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம்.
Moto G73 5G launch on March 10: குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள்
Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனிலுள்ள அம்சங்கள்:
Xiaomi 13 Pro ஆனது செராமிக் ஒயிட் மற்றும் செராமிக் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இது கேமராவை விரும்பும் பயனர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லைகா-டியூன் செய்யப்பட்ட கேமராக்களைக் கொண்ட முதல் ஷாவ்மி போன் இந்த ஸ்மார்ட்போன் தான். கேமராவைப் பொறுத்தவரையில், மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்கள் (அகலமான + அல்ட்ரா-வைட் + டெலிஃபோட்டோ) உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் உள்ளது.
இது 6.7 இன்ச் 2K வளைந்த முனை டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வழங்குகிறது. காட்சிகள் துல்லியமாக தெரிவதற்காக டால்பி விஷன் மற்றும் HDR10+ நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.மற்ற பிரீமியம் Xiaomi ஸ்மார்ட்போன்களைப் போலவே, Xiaomi 13 Pro போனிலும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதே போல், 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வசதியும் உள்ளது. குறிப்பாக பயனர்கள் தங்கள் இயர்பட்களை ரிவர்ஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யலாம்.
அதற்கு ஏற்ப 4,820mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் செயல்திறன் மிக்கதாக இருக்கும். மற்றபடி, இது 5ஜி ஸ்மார்ட்போன் என்பதால், பல்வேறு இடங்களில் 5ஜி நெட்வொர்க் பெறும் வகையில், சுமார் 16 விதமான 5ஜி பேண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 13, MIUI 14 இருப்பது சிறப்பு. ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ளபடி Xiaomi 13 Pro ஆனது இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஷாவ்மி ஸ்மார்ட்போன் ஆகும்.
Oppo Flip phone | ஓப்போ பிரியர்களே இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க!