Meta layoffs: மெட்டாவின் மெகா ஆள் குறைப்பு திட்டம்! ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைக்கு வேட்டு!

Published : Mar 07, 2023, 08:45 PM ISTUpdated : Mar 07, 2023, 09:08 PM IST
Meta layoffs: மெட்டாவின் மெகா ஆள் குறைப்பு திட்டம்! ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைக்கு வேட்டு!

சுருக்கம்

ஏற்கெனவே 11,000 ஊழியர்களைக் பணியிலிருந்து நீக்கியுள்ள மெட்டா நிறுவனம் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் மெகா ஆள் குறைப்பு திட்டத்தை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்த வாரத்திற்குள் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறைக்க இருப்பதாக அந்நிறுவனத்துக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா, 2022ஆம் ஆண்டு நவம்பரில் 13% பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையை செயல்படுத்தியது. அந்தப் பணிநீக்க நடவடிக்கையை நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் முயற்சி என்று கூறியது. அதன்படி முதல் முறையாக பெரிய பணிநீக்க நடவடிக்கையாக மெட்டா 11,000 ஊழியர்களை வேலையில் இருந்து அகற்றியது.

Female Entrepreneurs in India: தனி வழியில் பயணித்து சாதித்த டாப் 10 இந்தியப் பெண் தொழிலதிபர்கள்!

இந்நிலையில், அடுத்த வாரத்தில் புதிய பணிநீக்க நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தனது மூன்றாவது குழந்தை பிறப்புக்கு முன் இந்தத் திட்டம் இறுதி செய்யப்படலாம் என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.

கடந்த பணிநீக்க அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது. ஆனால் அதற்குப் பிறகு மெட்டா ஊழியர்களில் பலரும் அடுத்த சுற்று பண்நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்நோக்கியே உள்ளனர். கடந்த வாரம் நிறைவடைந்த நிறுவனத்தின் செயல்திறன் மதிப்பீட்டின்போது 2023ஆம் ஆண்டை மெட்டாவின் செயல்திறன்மிக்க ஆண்டாக ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இதனிடையே, பணிநீக்க நடவடிக்கை குறித்த தகவல்களால் கலக்கம் அடைந்திருக்கும் மெட்டா ஊழியர்கள் இந்த மாதம் அறிவிக்கப்படும் போனஸ் தொகை கிடைக்குமா அல்லது அதற்குள் வேலையே பறிபோய்விடுமா என்ற பதற்றத்தில் உள்ளனர்.

Waste to Wealth: எல்லோரும் இவங்கள மாதிரி செய்யலாம்! தந்தை - மகனைப் பாராட்டிய பிரதமர் மோடி!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?