Xiaomi 11T Pro : 17 நிமிடங்களில் முழு சார்ஜ் - புது சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

By Nandhini Subramanian  |  First Published Jan 19, 2022, 12:47 PM IST

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
 


சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 5MP 2x டெலிமேக்ரோ கேமரா, f/2.4 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சியோமி 11டி ப்ரோ 5000mAh டூயல் செல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போனினை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். 

Tap to resize

Latest Videos

சியோமி 11டி ப்ரோ 5ஜி அம்சங்கள்

- 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR 10+, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- 108MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5MP 2x டெலிமேக்ரோ கேமரா, f/2.4
- 20MP செல்ஃபி கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர்
- 8GB+128GB மெமரி
- 8GB+256GB மெமரி
- 12GB+256GB மெமரி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டால்பி விஷன் அட்மோஸ் 
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- ஹார்மன் கார்டன் சவுண்ட்
-ஹை-ரெஸ் ஆடியோ சான்று 
- 5000mAh டூயல் செல் பேட்டரி
- 120 வாட் ஹைப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

புதிய சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ.39,999 என்றும் 8GB+256GB மாடல் விலை ரூ. 41,999 என்றும் 12GB+256GB விலை ரூ. 43,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அறிமுக சலுகையாக சிறப்பு வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை இன்று (ஜனவரி 19) மதியம் 2 மணிக்கு அமேசான் மற்றும் எம்.ஐ. வலைதளங்களில் நடைபெறுகிறது.

click me!