Redmi Note 11 : ஜனவரி 26-இல் புதிய ரெட்மி நோட் சீரிஸ் வெளியீடு

By Nandhini Subramanian  |  First Published Jan 19, 2022, 11:51 AM IST

ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 


ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதுபற்றிய அறிவிப்பை சியோமி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோட் 11 சீரிசை விட வித்தியாசமாகவே இருக்கும். 

சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11 மாடல்களில் குவல்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்கள் வழங்கப்படலாம். சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் மீடியாடெக் சிப்செட்கள் வழங்கப்பட்டு இருந்தன. புதிய நோட் 11 சீரிஸ் மாடல்கள் முந்தைய நோட் 10 ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டு தேதியை சியோமி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு நிகழ்வு அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்படுகிறது. 

சீன சந்தையில் ரெட்மி நோட் 11 சீரிஸ் - ரெட்மி நோட் 11 5ஜி, ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 11 4ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ரெட்மி நோட் 11 5ஜி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11டி 5ஜி எனும்  பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் இந்தியாவில் சியோமி 11i மற்றும் சியோமி 11i ஹைப்பர் சார்ஜ் 5ஜி பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டன.

ரெட்மி நோட் 11 சீரிஸ் அனைத்து மாடல்களிலும் சியோமி மீடியாடெக் சிப்செட்களையே வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் வெளியான தகவல்களில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதன் வடிவமைப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

click me!