15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! மிரட்டும் வீர மஹாசாம்ராட்!!

By SG Balan  |  First Published Sep 1, 2024, 10:25 PM IST

13.5-மீட்டர் நீளமுள்ள இந்த மின்சாரப் பேருந்து இரண்டு ஆக்ஸில்களில் இயங்கும் வகையில் சக்திவாய்ந்த 320 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. எக்ஸ்போனன்ட் நிறுவனத்தின் 1 மெகாவாட் ரேபிட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் இந்தப் பேருந்தின் பேட்டரியை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.


பேருந்து உற்பத்தி நிறுவனமான வீர வாகனா, பெங்களூரைச் சேர்ந்த எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ்போனன்ட் எனர்ஜியுடன் கூட்டு சேர்ந்து வீர மஹாசாம்ராட் மின்சாரப் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. 15 நிமிட ரேபிட் சார்ஜ் திறன் கொண்ட உலகின் முதல் இன்டர்சிட்டி எலக்ட்ரிக் பஸ் இதுவாகும்.

13.5-மீட்டர் நீளமுள்ள இந்த மின்சாரப் பேருந்து இரண்டு ஆக்ஸில்களில் இயங்கும் வகையில் சக்திவாய்ந்த 320 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. எக்ஸ்போனன்ட் நிறுவனத்தின் 1 மெகாவாட் ரேபிட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் இந்தப் பேருந்தின் பேட்டரியை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

Tap to resize

Latest Videos

undefined

வீர மஹாசாம்ராட் EV என்று அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் பேருந்துக்கான இயக்கச் செலவு வழக்கமான டீசல் பேருந்துகளை விட 30% வரை குறைவு. 600,000 கிமீ அல்லது 3,000 முறை சார்ஜ் செய்து இயக்கக்கூடிய அளவு அற்புதமான பேட்டரி உத்தரவாதத்துடன் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் அவதாரம் எடுத்த எம்.ஜி. ஆஸ்டர் கார்! இந்தியாவில் ரிலீஸ் எப்போது?

இந்தப் புதிய தொழில்நுட்பம் மின்சார பேருந்துகளை நீண்ட தூரம் இயக்குவதில் உள்ள தடையைப் போக்கும் வகையில் உள்ளது. பேருந்தின் பெரிய பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்ற குறையையும் இது நிவர்த்தி செய்கிறது.

இந்தப் பேருந்தில் உள்ள பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (BMS) ஒவ்வொரு செல்லின் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கிறது. அதே நேரத்தில் சார்ஜிங் செயல்முறை சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிறப்பாகச் செய்யப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சார்ஜிங் ஸ்டேஷன் ஆஃப்-போர்டு தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. இது சார்ஜ்செய்யும் போது பேட்டரியில் உகந்த வெப்பநிலையை பராமரிக்க குளிரூட்டியை இயக்குகிறது. இது 50 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான வெப்பநிலையிலும்கூட, பேருந்து சிறப்பாக இயங்க அனுமதிக்கிறது.

முதல் கட்டமாக வீர வாகனாவும் எக்ஸ்போனென்ட் எனர்ஜியும் பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடத்தை மின்மயமாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. டீசல் பேருந்துகளில் இருந்து மின்சாரப் பேருந்துக்கு மாறுவதை சீராக செயல்படுத்த, எக்ஸ்போனென்ட் நான்கு 1 மெகாவாட் சார்ஜிங் நிலையங்களை இந்த வழித்தடத்தில் அமைக்க உள்ளது.

வழக்கமாக, டீசல் பேருந்துகள் ஒவ்வொரு 300 கி.மீக்கும் 15-20 நிமிடம் நிறுத்தப்படும். இந்தப் பேருந்தும் வேகமாக சார்ஜ் செய்யப்படுவதால் தற்போதைய பேருந்து அட்டவணையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் மின்சாரப் பேருந்துக்கு மாறலாம்.

ரயிலில் சக்கரத்தில் நசுங்கி 2 சிறுவர்கள் சாவு! மொபைல் கேம் மோகத்தால் நேர்ந்த விபரீதம்!

click me!