கிட்டத்தட்ட எந்தத் தகவலை வேண்டுமானாலும் கூகுளில் தேடி பெறு முடியும். கூகுள் பயனர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உலக முழுவதிலும் இருந்து தகவல்களை அள்ளி வந்து கொடுக்கிறது. ஆனால், சில விஷயங்களைத் தேடுவது உங்களுக்குச் சிக்கலை உண்டாக்கிவிடும். சிறைக்குச் செல்லக்கூட காரணம் ஆகலாம்.
டிஜிட்டல்மயமான உலகில் இன்டர்நெட் பயன்பாடு தினசரி தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல வசதிகள் மொபைல் மூலமே அணுகும் வாய்ப்பு இன்டர்நெட் மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு பல வேலைகளை எளிமையாக்கி இன்டர்நெட்டில் கோலோச்சி வரும் சர்ச் எஞ்சின் கூகுள்.
கிட்டத்தட்ட எந்தத் தகவலை வேண்டுமானாலும் கூகுளில் தேடி பெறு முடியும். கூகுள் பயனர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உலக முழுவதிலும் இருந்து தகவல்களை அள்ளி வந்து கொடுக்கிறது. ஆனால், சில விஷயங்களைத் தேடுவது உங்களுக்குச் சிக்கலை உண்டாக்கிவிடும். சிறைக்குச் செல்லக்கூட காரணம் ஆகலாம்.
undefined
ஆபாசப் படங்கள்:
கூகுளில் ஆபாசப் படங்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் போன்றவற்றைத் தேட வேண்டாம். குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்ப்பது, தயாரிப்பது மற்றும் வைத்திருப்பதுகூட போக்சோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன? கேரளாவை உலுக்கும் வழக்கின் முழு விவரம்
வெடிகுண்டு:
வெடிகுண்டு தயாரிக்கும் முறை பற்றி தேடினாலும் டேஞ்சர்தான். பாதுகாப்பு நிறுவனங்கள் இன்டர்நெட் பயன்பாட்டில் இதுபோன்ற தேடல்களைக் கண்காணித்து வரும். அவர்களிடம் சிக்கினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே தவறியும் வெடிகுண்டு தொழில்நுட்பம் பற்றித் தேட வேண்டாம்.
திருட்டு டவுன்லோட்:
திரைப்படம், புத்தகம் போன்றவற்றை காப்புரிமையை மீறி ஆன்லைனில் அப்லோட் செய்வதும், டவுன்லோட் செய்வதும் குற்றம் ஆகும். திருட்டு பதிப்பை கசிய விடுபவர்களுக்கு காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை கிடைக்கும்.
கருக்கலைப்பு:
மருத்துவரின் முறையான அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கருக்கலைப்பு செய்வது எப்படி தேடுவதும் சட்டவிரோதமானது. எனவே, இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் புகைப்படம்:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உண்மையான பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பற்றிய தகவல்களையும் வெளியிடக் கூடாது.
கேட்கக்கூடாத கேள்விகள்:
வாடிக்கையாளர் சேவை மைய எண்களை கூகுள் மூலம் தேடிப் பெற முயற்சி செய்யக்கூடாது. போலியான எண்கள் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். எனவே இதுபோன்ற விவரங்களை அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமே பெற வேண்டும்.