கூகுள் கணக்கில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் சேவைகளுக்கான இணைப்புகள் உள்ளன. அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் கூகுள் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். கூகுள் கணக்கில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் சேவைகளுக்கான இணைப்புகள் உள்ளன. அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நவீன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் தானாகவே கூகுள் டிரைவில் பேக்அப் எடுக்கின்றன. அப்படி தானாகவே பேக்அப் எடுக்காவிட்டால், செட்டிங்ஸ் பகுதியில் சென்று ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். ஒவ்வொரு மொபைலிலும் இந்த டேட்டா பேக்அப் அம்சம் மாறுபடலாம்.
பேக்அப் தொகுப்பில் பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களுடன் தொடர்பு விவரங்கள், அழைப்பு வரலாறுகள், SMS மற்றும் MMS செய்திகள் ஆகியவை அடங்கும். வைஃபை நெட்வொர்க்குகள், டாஸ்வேர்டு, மொபைல் செட்டிங்ஸ் உள்பட பலவும் பேக்அப்பில் இருக்கும்.
ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
ஆண்டிராய்டு மொபைலில் பேக்அப் எடுப்பது எப்படி?
மொபைலில் செட்டிஸ் பகுதிக்குச் சென்று, Accounts and Backups என்பதைத் தேர்வு செய்யவும். அதில் கூகுள் டிரைவ் பேக்அப் என்பதற்குள் செல்லவும். பொதுவாக, இதில் உள்ள Backup by Google One என்பது ON செய்யப்பட்டிருக்கும். அப்படி இல்லை என்றால் ON செய்துகொள்ளவும்.
ஏற்கெனவே கூகுள் ஒன் பேக்அப் இயங்கிக்கொண்டிருந்தால், மொபைலின் பெயர் மற்றும் கடைசியாக பேக்அப் எடுத்த நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். என்னென்ன தரவுகள் பேக்அப் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் இருக்கும். அதில், ஆப்ஸ், போன் கால்ஸ் போன்ற பல விவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
அடிக்கடி மொபைல் மாற்றும் வழக்கம் கொண்டவராக இருந்தால் அடிக்கடி பேக்அப் பகுதிக்குச் சென்று Backup now என்பதை கிளிக் செய்வது நல்லது. இதன் மூலம் உங்கள் கணக்கின் மிக சமீபத்திய தரவு பாதுகாப்பாக சேமிக்கப்படுவதற்கு உத்தரவாதம் கிடைக்கும்.
புதுசா கிளம்பி இருக்கும் ஸ்கிராட்ச் கார்டு மோசடி! வெகுளித்தனமா 18 லட்சத்தை பறிகொடுத்த பெண்!
இன்னொரு வழி:
கூகுள் பேக்அப்பை கூகுள் ஒன் மூலம் சேமிப்பதற்குப் பதிலாக மற்றொரு வழியும் உள்ளது. அதுதான் கூகுள் டேக்அவுட் (Google Takeout). கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலம் பேக்அப் டேட்டாவை டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் கூகுள் டேக்அவுட் மூலம் கிடைக்கிறது.
myaccount.google.com என்ற முகவரிக்குச் சென்று இடது பக்கம் உள்ள மெனுவில் Data and Privacy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் Download or delete your data என்ற பகுதியில் Download your data என்பதை கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் மெனுவில் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சேவைகளின் பட்டியல் இருக்கும். அதில் எந்தெந்த கூகுள் சேவைகளின் தரவுகளை பேக்அப் எடுக்க வேண்டுமோ அவற்றை டிக் செய்து தேர்வுசெய்யவும்.
அடுத்த பகுதிக்குச் சென்று Export once என்பதை தேர்வு செய்து Create export என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கூகுள் அக்கவுண்ட் பேக்அப் டேட்டா டவுன்லோட் செய்யக்கூடிய கோப்பாக திரையில் தோன்றும். வெவ்வேறு கூகுள் சேவைகளின் தரவுகளை தனித்தனியாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
2,500 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி! பிளாட், கார் வாங்கி சொகுசாக வாழ்ந்த முக்கியக் குற்றவாளி கைது!