Wipro Work From Home Ends: அதிரடி நடவடிக்கையால் சோகத்தில் ஐடி ஊழியர்கள்!!

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 12:18 PM IST

விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  Wipro Ask employee to come office and Put end card to Work From Home என்று மின்னஞ்சல் செய்திகள் வந்துள்ளன. 


கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்தியது. அதன்பிறகு இன்று வரையில் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்குமாறும் சில நிறுவனங்கள் ஹைபிரிட் சிஸ்டம் என்ற முறையைக் கொண்டு வந்துள்ளன.

அந்த வகையில், தற்போது பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவும், வீட்டிலிருந்து வேலை என்ற முறையை மெல்ல மெல்ல ரத்து செய்கிறது. இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “அக்டோபர் 10 முதல், விப்ரோ அலுவலகம் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும். புதன்கிழமைகளில் அலுவலகம் இருக்காது. 
ஹைபிரிட் முறையிலான பணி என்பது வேலையில் நல்லதொரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்கும், அதே வேளையில் தனிப்பட்ட முறையில் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், ஒரு டீம் வொர்க் செய்வதற்கும் எங்களுக்கு உதவும். இந்த 4 நாட்களில் குறைந்தது 3 நாட்களில் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

நீங்கள் இரவு நேரங்களில் சேட் செய்பவரா ? அப்படியானால் இந்த ட்ரிக் உங்களுக்கு கட்டாயம் பயன்படும்

மேலும், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் அக்டோபர் 10 முதல் வாரத்திற்கு மூன்று முறை அலுவலகங்களில் இருந்து வேலை செய்வார்கள். எங்கள் அலுவலகங்கள் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும். எங்கள் குழுக்கள் அனுபவங்களையும், வாய்ப்புகளையும் மேம்படுத்துவதோடு, பணியில் ஒரு ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதையும் உறுதிசெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம்! காரணம் என்ன?

விப்ரோவின் இந்த திடீர் மின்னஞ்சலால் விப்ரோ ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், இவ்வாறு அலுவலகத்திற்கு வர வேண்டுமென்றால், குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே சொன்னால் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

click me!