விண்டோஸ் 7 and 8  இனி எங்கும்  கிடைக்காது -  பல்டி அடித்த மைக்ரோசாஃப்ட்...!!!

 |  First Published Nov 5, 2016, 7:48 AM IST



விண்டோஸ் 7 & 8  இனி எங்கும்  கிடைக்காது -  பல்டி அடித்த மைக்ரோசாஃப்ட்...!!!

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதாவது, டெல், டோஷிபா போன்ற நிறுவனங்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து,  அவர்கள் விற்கும் புதிய கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களை நிறுவி விற்று வந்தது 

தற்போது இது போன்ற ஒப்பந்த அடிப்படையிலான விண்டோஸ் 7, 8 விற்பனையை நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பு :

விற்பனை தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!