
அத்தியாவசிய பொருட்கள் வரிசையில் தற்போது வைபை டேட்டாவும் இடம் பிடித்துள்ளது.
அதாவது மளிகை கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை போல, சாதாரண மளிகை கடைகளிலும் வைபை டேட்டா விற்பனை செய்ய மத்திய தொலைதொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, குறைந்த கட்டணமாக ரூ.1௦ கொடுத்து டேட்டா வவுச்சர்களை வாங்கிக்கொள்ளலாம் என தொலைதொடர்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தற்போது இந்த திட்டத்தை எப்படி நடை முறை படுத்துவது ? எந்த அளவிற்கு சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், சந்தையில் எந்த அளவிற்கு இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருக்கும் என்பதை தீர ஆராய்ந்து பின்பு அதற்கேற்றார் போல், திட்டமிடுதல் பணியை மத்திய தொலைதொடர்பு ஆராய்ச்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மேற்கொண்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.