ஜியோவின் இலவச சேவை முடிந்து கட்டண சேவை தொடங்கியுள்ள நிலையில், ஜியோ மீண்டும் பல புதிய சலுகையை அறிவித்தது. அதன் படி தன் தனா தன் என்ற புதிய திட்டத்தின் கீழ் சலுகையை அறிவித்து இருந்தது. இதற்கு போட்டியாக தற்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகையை வாரி வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், ஒரு சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது.
பி.எஸ்.என்.எல்-இன் STV349, STV333 மற்றும் STV395 புதிய திட்டங்களின் படி கூடுதல் டேட்டா வழங்க திட்டமிட்டுள்ளது
அதாவது, BSNL , STV339 திட்டத்தின் படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2ஜிபி டேட்டாவிற்கு பதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும் எனவும், கூடவே வாய்ஸ் காலிங் சலுகையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது
ரூ.349 திட்டம்
அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
தினமும் 2 ஜிபி டேட்டா
கால அவகாசம் : 28 நாட்கள்
ரூ.333 திட்டம்
தினமும் 3ஜிபி டேட்டா
கால அவகாசம் 90 நாட்கள் வேலிடிட்டி
ரூ.395 திட்டம்
தினமும் 2ஜிபி டேட்டா
3000 நிமிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் அழைப்புகள் இலவசம்
மற்ற நெட்வொர்க்களுக்கு 1800 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்ஸ்
கால அவகாசம் : 71 நாட்கள் ஆகும்.
இன்னும் பல திட்டங்கள் உள்ளது. பிஎஸ்என்எல் பொறுத்தவரை 2 ஜி சேவையில் இருந்து 3ஜி டேட்டா சேவையை கூடுதல் சலுகையாக வழங்குகிறது