
அறிமுகமானது ஹூண்டாய் Xcent ..! லிட்டருக்கு 25 கிலோ மீட்டர்...விலை ரூ.5.3௦ லட்சம்...!
கார் தயாரிப்பில் பிரபல நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் Xcent ரக காரை அறிமுகம் செய்துள்ளது. புதியதாக அறிமுகம் செய்துள்ள இந்த கார் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள்
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வந்துள்ளது. மேலும் ஹூண்டாய் நிறுவனத்தின் இதற்கு முன்னதாக வெளிவந்த எலன்ட்ரா காரில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டது .
மேலும்,
ஆன்ட்ராய்ட் ஆட்டோ, மிர்ரர் லிங்க், ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் சிறப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1.2 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு என்ஜீன் கொண்டுள்ளது.
பெட்ரோல் கார் வாங்கினால், ஒரு லிட்டருக்கு 20.14 கிலோமீட்டரும், டீசல் கார் வாங்கினால், ஒரு லிட்டர் டீசலுக்கு 25.4 கிலோமீட்டர் மைலேஜூம் கொடுக்கும் திறன் கொண்டது இந்த கார்
விலை
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டஇந்த விலை ரூ.5.38 லட்சத்தில் தொடங்கி ரூ.8.41 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.