உச்சக்கட்ட வளர்ச்சியில் பேஸ்புக்..! மூளை நினைப்பதை தானாகவே டைப் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..

 |  First Published Apr 20, 2017, 1:12 PM IST
facebook introducing brain censors



சமீபத்தில் பேஸ்புக் F8  டெவலப்பர்  கான்பரன்சிங் நிகழ்ச்சி மிகவும் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல புதிய  சிறப்பு திட்டங்கள் பற்றி விரிவாக  விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல புதிய திட்டங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்தது பேஸ்புக். அதன் படி, சரவுண்டு 36௦ கேமராக்கள் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம்  செய்யப்பட்டது மேலும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகளையும் அதன் பயன்பாடுமற்றும் அது எவ்வாறு மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பதை தெளிவாக விளக்கப்பட்டது.

Latest Videos

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி  கண்ணாடி

undefined

இந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என  இரண்டையும் இயக்கும் திறன் கொண்டது என தெரிவித்தார். இதனை அடுத்து வரும் சில ஆண்டுகளில் வணிக  ரீதியாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது .

பேஸ்புக் பில்டிங் 8 திட்டம்

பேஸ்புக்கின் இந்த புதிய திட்டத்தின் படி, நம் மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்யும் திறன் கொண்டது.

அதாவது ஒரு நிமிடத்திற்கு 1௦௦ வார்த்தைகளை டைப் செய்யும் திறன் கொண்டது. அதாவது ஒருவர் தனது ஸ்மார்ட் போனில் டைப் செய்வதை விட, 5 மடங்கு அதிகமாக வேகத்துடன் டைப் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்யும்   நிலையில் உருவாகப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூளையில் உள்ள ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை தான், இந்த திட்டம் மூலம்  அதிவேகமாக தானே  டைப் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் மிக துல்லியமாக டைப் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித மூளையில் நினைப்பதை சிறிய சிப்செட்கள் மூலமாக வார்த்தைகளாக டைப் செய்யும் நுணுக்கத்தை தான் இந்த திட்டம் மூலம் செயல் படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது 

click me!