ஜியோவின் இலவச சேவையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தினர். இந்நிலையில், தற்போது கட்டண சேவையில் ஜியோ இறங்கியுள்ளதால் அதற்கான ப்ரைம் வாடிக்கையாளர்கள் திட்டத்தில் இணைவதற்கு 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஜியோ தெரிவித்து இருந்தது .
பின்னர் அதற்கான கால அவகாசத்தையும் ஏப்ரல் 15 என நிர்ணயித்தது. இந்நிலையில்,தன் தனா தன் என்ற பெயரில் ஜியோ புதிய சலுகையை அறிவித்து இருந்தது. அதன் படி, ரூ.149, ரூ.309 மற்றும் ரூ.509 போன்ற மாதாந்திர சலுகை திட்டங்களுக்கு தொடர்ந்து ரீசார்ஜ் செய்யலாம். இதில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1ஜிபி அல்லது 2ஜிபி வரையிலான டேட்டாவினை ரீசார்ஜ் செய்யும் திட்டத்திற்கு ஏற்பபெற முடியும்.
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்கள் ரூ.349 அல்லது ரூ.549 செலுத்தி சலுகைகளை பெற முடியும் என்பது கூடுதல்விவரம்.
இத்தனை சலுகைகளை ஜியோ வழங்கியும், ஒரு சில பிரைம் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தப் பட்ச ரீசார்ஜ் தொகையான 99 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் ஒரு சிலர் வெறும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு, அதற்கடுத்தப்படியாக எந்த ரீசார்ஜ் செய்யாமலும் இருகின்றார்கள்.
இந்நிலையில் இதுவரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.ஜியோ சேவையை பெற வேண்டுமென்றால், குறிப்பிட்ட திட்டத்திற்கான ஒரு தொகையில் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தான் ஜியோ சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
குறிப்பு :
ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு முன், ரூ.3௦3 மற்றும் அதற்கும் அதிகமான தொகையில் ஜியோ ரீசார்ஜ் செய்திருந்தால், ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.