தொழிநுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பது தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்.
வாட்ஸ்ஆப் பீட்டா வர்ஷனில் மேம்படுத்தப்பட்ட மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.அதன் படி, வாட்ஸ்அப்பில் ஏற்கனவே ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனில், நாம் விருப்பும் போட்டோ மற்றும் வீடியோ வைக்கும் ஒரு ஆப்ஷனை அறிமுகம் செய்தது .
இந்நிலையில் அதற்கு அடுத்தப்படியாக, தவறுதலாக யாருக்காவது நாம் மெசேஜ் அனுப்பி விட்டால் அதனை மாற்றி அனுப்பவோ அல்லது அன்சென்ட் செய்துக் கொள்ளவோ, ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஏதாவது ஒரு வார்த்தையை ஹைலைட் செய்து காண்பிக்கும் விதமாக, இடாலிக் அல்லது போல்ட் எழுத்துகளில் டைப் செய்து அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்ஆப்
இதே போன்று நாம் அனுப்பும் மெசேஜை ஐந்து நிமிடத்திற்குள், அன்சென்ட்(unsent )மற்றும் எடிட்(edit) செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட இந்த வசதியை பெறலாம்