ஜியோ என்றாலே இலவச சேவை மட்டுமே நினைவில் வரும். தற்போது கட்டண சேவை தொடங்கினாலும் ஜியோவின் குறைந்த கட்டணத்தில் வழங்கும் சேவையானது இன்னமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் ஜியோ அடுத்தக்கட்டமாக டிடிஎச் சேவையில் இறங்கியுள்ளது. அதாவது 6 மாதங்களுக்கு இலவச சேவை வழங்க உள்ளதாகவும் அதற்காக இப்பொழுதே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும்,அது தொடர்பான ஒரு லிங்க் தற்போது வேகமாக பரவி வருகிறது .
அதன்படி, இது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஒரு லிங்க் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் இடம்பெற்றுள்ளன மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
சலுகை திட்டங்கள் என்ன ?
ஜியோ டிடிஎச் அறிமுக சலுகையின் கீழ், செட் ஆப் பாக்ஸ் சேவையை முதல் 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக தகவல் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 350 கும் அதிகமான சாதாரண சேனல்களும்,432 டிவி சேனல்களும்,5௦ கும் அதிகமான எச்டி சேனல்களும் இடம் பெரும் என தெரிகிறது.
இந்த சேவையை பெற இதுவரை 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த லிங்க் தற்போது வேகமாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அவ்வாறு அந்த லிங்கை ஓபன் செய்யும் போது அதில் கூகுள் விளம்பரங்களும் இடம் பெற்றுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என இதுவரை அதிகார பூர்வ அறவிப்பு வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த சலுகை திட்டங்கள் உண்மைதானா என்பதை உறுதியாக தெரிந்துகொண்டு பின்னர் பதிவு செய்வது நல்லது