கர்ப்பம் முதல் குவா குவா வரை..! உதவியாக இருக்கும் "kilkari" ஆப்ஸ்..! அசத்தும் ஹரியானா..!

 |  First Published Apr 22, 2017, 1:12 PM IST
new app kilkari in ariyaana



தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் வாழும்   இந்த காலக் கட்டத்தில் அனைத்துமே விஞ்ஞானம் ஆகி விட்டது. சிறு சிறு செயல்கள் செய்வது கூட கணினி என்ற நிலை உருவாகி உள்ளது .  அதாவது மனித மூளைக்கு மட்டுமே வேலை அதிகமாக உள்ளது. உடல் உழைப்பு  என்பது அறவே மறைந்து விட்டது என்றே கூறலாம்.

அதாவது தற்போது  புது புது செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் மூலம் நமக்கு தேவையான அனைத்து விவரங்களையும், அதாவது  நாம் வெளியில் சென்று தான் ஒரு குறிப்பிட்ட  வேலையை செய்ய வேண்டும் என்றாலும் கூட, அதனையும் நம்  வீட்டில் அமர்ந்தபடியே  செயலி  மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Latest Videos

உதாரணத்திற்கு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றாலும்   கூட, நம் மொபைல் போனில் தரவிறக்கம் செய்து வைத்துள்ள குறிப்பிட்ட செயலி மூலம்,  இன்டர்நெட் கனக்ஷன் மூலம்  வீட்டில்  அமர்ந்த  படியே  நொடி பொழுதில் செய்து முடிக்க முடியும்

இத்தனை வசதியை ஏற்படுத்தி தரும் செயலிகள் தற்போது, கர்ப்பிணி   பெண்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக , kilkari என்ற   செயலியை  ஹரியானா  மாநிலத்தில், அரேசே அறிமுகம் செய்துள்ளது

undefined

பயன்கள் :

கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள்

மருத்துவ பரிசோதனை 

மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்தும் எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரத்தையும்  நியாபகப்படுத்துகிறது  

அதுமட்டுமில்லாமல் பிரசவத்திற்கு பின்னும் இந்த செயலிகள் ,குழந்தைகள்  பரமாரிப்பு  தொடர்பான அனைத்து விவரத்தையும் வழங்கும் என  ஹரியான மாநில அரசு தெரிவித்துள்ளது 

click me!