Secret of Watch : இந்த உலகத்தில் கடந்த 16ம் நூற்றாண்டு முதல் டைம் பீஸ் எனப்படும் வாட்ச் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வாட்ச் குறித்த ஒரு சுவாரசிய தகவலை இப்பொது காணலாம்.
இந்த டிஜிட்டல் உலகில் சில நூறு ரூபாய்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்சுகள் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் முதலில் 1810ம் ஆண்டு தான் நப்பல்ஸ் ராணிக்கு ஆபிரகாம் லூயிஸ் என்பவர் ஒரு கைக்கடிகாரத்தை வடிவமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடைய வாழ்க்கையில் கைக்கடிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்ட வருகிறது.
ஆனால் அவற்றை நீங்கள் கடைகளில் வாங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அனைத்து வாட்ச்சிகளும் நிறுத்தப்பட்டு இருக்கும். நிச்சயம் நாம் அனைவரும் அதை கவனித்திருப்போம், அதே போல அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஏன் வாட்ச் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்பதற்கு சில கதைகளையும் கேட்டிருப்போம்.
வாட்ஸ்அப் DP யை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! சைலெண்டாக அறிமுகமான பிரைவசி அப்டேட்!
சரி எல்லா வாட்ச்களும் சரியாக 10.10 என்கின்ற மணியை காட்ட என்ன காரணம்? இன்றளவும் இதுகுறித்து பல கதைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம். அவர் 10.10 மணிக்கு இறந்ததால் அதை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் இறந்த நேரம் காலை 7 மணி என்று கூறப்படுகிறது.
அதே போல இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு போட்ட நேரம் அது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் அந்த குண்டு வீசப்பட்ட நேரமானது அதிகாலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சரி உண்மையில் 10.10 என்ற நேரத்தில் வாட்ச் நிறுத்தப்பட என்னதான் காரணமாக இருக்கும்?
10.10 என்று நேரத்தை காட்டுவதற்கு பெரிய அளவில் கூறப்படும் இரண்டு காரணங்களில் ஒன்று V என்ற அந்த வடிவம் தான். V என்ற Victory, அதாவது வெற்றியை குறிக்கும் வகையில் வாட்ச் அப்படி வைக்கப்படுவதாக கூறுகின்றனர். அதே போல 10.10 என்ற மணி, அந்த வாட்ச் என்ன பிராண்ட் என்பதை தெளிவாக காட்டும், ஆகையால் அவை அந்த நேரத்தில் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.