Flipkart அலர்ட்: விலையுர்ந்த பொருளை வாங்கும் போது, இந்த ஆப்ஷன் டிக் செய்யுங்க!

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 11:05 PM IST

பிளிப்கார்ட்டில் விலையுர்ந்த பொருளை ஆர்டர் செய்யும் போது, ஓபன் பாக்ஸ் டெலிவரி என்று ஆப்ஷன் பயன்படுத்திக் கொள்ளும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிளிப்கார்ட்டில் லேப்டாப் ஆர்டர் செய்த ஒருவருக்கு, சோப்பு கட்டி அனுப்பிய மோசடி சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் குறித்து பிளிப்கார்ட்டுக்கு பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். அப்போது, பிளிப்கார்ட் தரப்பில், ‘நீங்கள் ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்துள்ளீர்கள், பிறகு எதற்காக, டெலிவரி பெட்டியை திறக்கும் முன்பே OTP எண்னை டெலிவரி நபரிடம் கொடுத்தீர்கள்’ என்று கேள்வி கேட்டது. இதனையடுத்து, பல முயற்சிகளுக்குப் பிறகு தான் அவருக்கு ரீஃபண்டு கிடைத்தது.


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது , ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற ஆப்ஷன் ஆகும். அதாவது, வழக்கமான டெலிவரியின் போது, OTP எண்னை டெலிவரி நபரிடம் சொல்லிவிட்டு பார்சல் வாங்குவோம். ஆனால், ஆர்டர் செய்யும் போதே ஓபன் பாக்ஸ் டெலிவரி என்பதை தேர்ந்தெடுத்து இருந்தால், நமது பார்சலை பிரித்து சரியான பொருள் தான் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்த பிறகே OTP எண்னை டெலிவரி நபரிடம் வழங்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! அதிகம் மெசேஜ் செய்பவரா நீங்கள்.. உங்களுக்கான அசத்தலான டிப்ஸ்

இந்த ஓபன் பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. மேற்கண்ட பாதிக்கப்பட்டவரின் விஷயத்தில், அவர் ஓபன் பாக்ஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்திருந்தாலும், பிளிப்கார்ட் பார்சல் வரும் போது, அவரது தந்தை தான் வாங்கியுள்ளார். வழக்கமான டெலிவரி தான் வந்துள்ளது என்று எண்ணி OTP எண் கொடுத்துவிட்டு பார்சல் பெற்றுள்ளார்.

நடந்த சம்பவங்களை சிசிடிவி கேமராவில் பதிவானதால், தகுந்த ஆதாரத்தோடு இந்த மோசடி சம்பவத்தை புகார் அளித்ததால், தகுந்த ரீஃபண்டு கிடைத்தது. அதுவும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பலரது எதிர்ப்புக்கு பிறகு தான் பிளிப்கார்ட் அவருக்கு ரீஃபண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

click me!