அடுத்த வாரம் அறிமுகமாகும் Moto G72 ஸ்மார்ட்போன்! என்னென் சிறப்பம்சங்கள் இருக்கும்?

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 10:26 PM IST

மோட்டோர்லா நிறுவனம் இந்தியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி Moto G72 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இதுதொடர்பாக பிளிப்கார்ட் பக்கத்தில் அதன் சிறப்பம்சங்கள் பற்றிய விளம்பரங்கள் வெளிவந்துள்ளன.


அனைத்து முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது 5ஜி வெர்சன்களை வெளியிட்டு வருகின்றன. இன்னும் சில ஸ்மார்ட்போன்களில் வெறும் ஒரேயொரு 5ஜி பேண்ட் மட்டும் வைத்துக் கொண்டு, குறைந்த விலையில் 5ஜி போன் என்று விளம்பரப்படுத்தி வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் நியாயமான விலையில், அதிக 5ஜி பேண்டுகளுடன் ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி72 என்ற புதிய  ஸ்மார்ட்போன் ஒன்றை அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனானது மிகவும் சிறப்பான 5ஜி சாதனமாக வரவுள்ளதாக இதன் அம்சங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இது அதிக செயல்திறன் கொண்டு செயல்படக்கூடிய, மீடியா டெக் ஹீலியோ ஜி 99 சிப்பைக் கொண்டு  வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் Google Pixel 7.. அப்படி என்ன சிறப்பம்சங்கள்!

ஸ்மார்ட்போனில் pOLED டிஸ்பிலே, விரல்ரேகை சென்சார் ,108 MP கேமரா ஆகிய அனைத்தும் உள்ளது. இதைத்தவிர இதில் 5000 mAh பேட்டரியும் இதில் உள்ளது. இது ஒரு சிறப்பான 4ஜி சாதனமாக வெளியாக உள்ளது. பண்டிகை சீசன் என்பதால், சிறப்பு தள்ளுபடி, ஆஃபர் விலையுடன் மோட்டோ ஜி 72 விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!