இனி Facebook, இன்ஸ்டா அனைத்தும் ஒரே கிளிக்கில் இயக்கலாம், Meta நிறுவனத்தின் அசத்தலான அம்சம்!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 9:24 PM IST
Highlights

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக்கில் தற்போது புதிய அம்சம் வந்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கின் முகப்பு பக்கம், அதாவது லாகின் பக்கத்தை புதிதாக டிசைன் செய்து உள்ளது.

இதன்படி நாம் ஃபேஸ்புக்கில் லாகின் செய்யும்பொழுது அதனோடு லிங்க் செய்துள்ள நமது இன்ஸ்டா பக்கத்திற்கு நம்மால் சுலபமாக செல்லகூடிய ஒரு அற்புதமான வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது.  இதுதொடர்பான ஃபோட்டோக்களை டிவிட்டரில் பக்கத்தில், மெட்டா நிறுவனம் பதிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் நாம் ஃபேஸ்புக் இன்ஸ்டா இவற்றிற்கு இடையில் நாமல் சுலபமாக ஸ்விட்ச் செய்து கொள்ள முடியும்.

Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!

 இந்த அம்சத்தினை நாம் ஆண்ட்ராய்டு , ios, வெப் வெர்சன் அனைத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான சோதனை முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. தொழிலதிபர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில், எளிமையான ஷார்ட்கட்டுளும் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

முன்னதாக, வாட்ஸ்அப், மெட்டா, இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒருங்கிணைந்த தளத்தை மெட்டா நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஓரே கிளிக்கில் மூன்று தளத்திலும் பதிவுகளையும், விளம்பரங்களையும் இடுகையிட முடியும். தற்போது பண்டிகை காலம் என்பதால், இ-காமர்ஸ் வெப்சைட்டுகளின் விளம்பரங்கள் சமூக ஊடங்களை குறிவைத்து விளம்பரப்படுத்தப்படுகிறது.

click me!