இனி எல்லா ஸ்மார்ட்போனிலும் இது கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்! அரசு நடவடிக்கை!!

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 6:17 PM IST

இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் இஸ்ரோவின் Navic ‘நேவிக்’ தொழில்நுட்பம் இருப்பதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


நமது இருப்பிடத்தை தடமறிவதற்கு ஜிபிஎஸ் என்ற தொழில்நுட்பம் உதவிபுரிகிறது. பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் தான் வருகிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த் உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த அனைத்து செயலிகளும் இந்த ஜிபிஎஸ் மூலமாகவே செயல்படுகிறது. 

இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு நமது இஸ்ரோ நிறுவனம் NavIC என்ற மேம்படுத்தப்பட்ட இடமறியும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. இது மிகமுக்கியமாக எல்லையோரத்தில் வசிப்பவர்கள், மீனவர்கள், ராணுவத்தினருக்கு உதவிகரமாக இருக்கும். ஜிபிஎஸ் உடன் ஒப்பிடுகையில் NavIC தொழில்நுட்பத்தின் துல்லிய திறன் பன்மடங்கு அதிகம். மேலும், பல ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ் உடன் சேர்த்து, நேவிக் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சிப்களும் உள்ளன. 

Tap to resize

Latest Videos

விண்கல்லில் மீது செயற்கைக்கோளை மோதச் செய்த அமெரிக்கா! காரணம் என்ன?

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் நேவிக் தொழில்நுட்பம் கட்டாயமாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்காக ஷாவ்மி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இந்த தொழில்நுட்பத்தை உட்பொதிக்க மொபைல் நிறுவனங்கள் கூடுதல் காலஅவகாசம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. 

அரசு தரப்பில் நேவிக் தொழில்நுட்பத்தை உட்பொதிப்பதிப்பதற்கு இதுவரையில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. ஏற்கெனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகளுக்குப் பதிலாக, ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

click me!