கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் பிக்சல் அறிமுகமாவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஆண்ட்ராய்டு தளத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் வந்தது. அதன்பிறகு, வெளிநாடுகளில் தான் பிக்சல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி வந்தன. இந்தியாவிலுள்ள பயனர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிக்சல் போன் வெளியாகும் போது வெளிநாட்டில் தான் ஆர்டர் செய்கின்றனர்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாகவுள்ள கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் டெக் பிரியர்கள், ஆண்ட்ராய்டு பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூகுள் தரப்பில் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களையும் லீக் செய்யப்பட்டுள்ளன.
ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்த Flipkart.. வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம்!
அதன்படி, பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் டிரிப்பிள் கேமராவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கேமராவிலும் 50 மெகாபிக்சல் ஐசோ செல் GN1 மெயின் கேமரா சென்சார்கள், 12 மெகா பிக்சல் சோனி Sony IMX381 அல்ட்ராவைடு கேமராக்கள் உள்ளன. டென்சார் ஜி2 சிப் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் மட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டில் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போனும் அதிகவிலையில் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் விலை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. Z Fold போனின் விலை 1.55 லட்சம் ஆகும். இப்படியான சூழலில், கூகுளின் பிக்சல் 7 ஸ்மார்ட்போனும் விலை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.