அடிக்கடி மெசேஜ், கட்டுரை எழுதுபவரா நீங்கள்? வெறும் ஒருசில நொடிகளில் மெசேஜ் டைப் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைவரும் மெசேஜ் செய்து வரும் நிலையில் உள்ளோம். வாட்ஸ்அப், டெலகிராம் இன்னும் பல செயலிகள், சமூக ஊடங்கள் மூலம் நமது எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். அவ்வாறு அடிக்கடி மெசேஜ் அனுப்பும் பயனர்களுக்காகவே பலவிதமான அம்சங்கள் ஸ்மார்ட்போனில் உட்பொதிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், சுலபமாக மெசேஜ் செய்வதற்கான எளிமையான வழிகளை ஸ்மார்ட்போன் நமக்கு வழங்குகிறது. இந்த ஷார்ட் கட்டை பயன்படுத்தி நாம் சில நொடிகளில் பக்கம் பக்கமாக மெஸ்ஸேஜ்களை டைப் செய்து கொள்ளலாம்.
undefined
ஐஓஎஸ் பயனாளர்களாக இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் >> டெக்ஸ்ட் ரீப்ளேஸ்மென்ட் என்ற ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு நமக்கு தேவையான ஷார்ட்கட்களை நாமே செட் செய்து கொள்ளலாம்.
Xiaomi Diwali Offer: ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி பல பொருட்களுக்கு ஆஃபர்!
ஆண்ட்ராய்டு பயனாளர்களாக இருந்தால் கீபோர்ட் செட்டிங்ஸ்ஸில் >> டிக்ஸ்னரியில் ப்ளஸ் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் எந்த கீவேர்டிற்கு என்ன டெக்ஸ்ட் வரவேண்டும் என்று செட் செய்து விட்டால் போதும், உங்களுக்கு பிடித்த மெசேஜ் உடனுக்குடன் திரையில் டைப் செய்யலாம்.
மேலும் அகராதி பயன்படுத்தி சொற்களஞ்சியம், புதிய சொற்கள் போன்றவற்றையும் பார்க்கலாம். இதன் மூலம் உயர்தரமான மெசேஜ்களை டைப் செய்து கெத்து காட்டலாம்.