
அதன்படி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி இயர் பட்ஸ் 3 ப்ரோ விலை 3000 ரூபாய் என இருந்தது. ஆனால் தற்பொழுது தீபாவளி சிறப்பு விற்பனையில் வெறும் 1500 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
1200 ரூபாய்க்கு விற்கப்பட்ட mi பவர் பேங்க் 3 ஆனது, தற்போது ஆஃபரில் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
ஷாவ்மியின் ஏர் ஃபிரையர் கருவிக்கும் நல்ல ஆஃபர் உள்ளது. ஏர் ஃபிரையரானது உணவுகளை சரிசமமாக வேக வைக்கிறது, மென்மையான மேற்பரப்பை உருவாக்குகிறது. ஏர் ஃபிரையரை நீங்கள் டோஸ்டர், BBQ அல்லது யோகர்ட் ஆகவும் பயன்படுத்தலாம்.
இத்தகைய ஷாவ்மி ஏர் ஃபிரையரின் விலை லான்ச் செய்யும்பொழுது 10,000 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்பொழுது 3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்ட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் 7000 ரூபாய்க்கு ஏர் ஃபிரையரை வாங்கலாம்.
அக்டோபர் மாதம் வரவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!
இதே போல், ரோபோட் வேக்கி மாப் 2 ப்ரோ விலையானது 30,000 ரூபாயாக இருந்தது.. ஆனால் சாவ்மி ஆஃபரை முன்னிட்டு 6000 ரூபாய் குறைந்து 24000 ரூபாயாக விற்கப்படுகின்றது.
இது மட்டுமல்லாமல் சாவ்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கும் ஆஃபர்கள் அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.