IRCTC: இனி Whatsapp மூலமாகவே ரயில்கள் வரும் நிலையம், வருகை நேரம், PNR ஸ்டேட்டஸ் அறிந்துகொள்ளலாம்!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 5:15 PM IST
Highlights

IRCTC ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரயில்கள் வந்து கொண்டிருக்கும் இடம், அடுத்த நிலையம், வருகை நேரம், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். 
 

மும்பையைச் சேர்ந்த Railofy என்ற இணையதளம், IRCTC உடன் இணைந்து ரயில் விவரங்களை வழங்கி வருகிறது. இந்த இணையதளம் தற்போது வாட்ஸ்அப்பிலும் ரயில் விவரங்களை உடனுக்குடன் வழங்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளது. 

அதன்படி, IRCTC மூலம் ரயில் முன்பதிவு செய்த பயணிகள், +91 9881193322 என்ற வாட்ஸ்அப் எண்னை தங்கள் மொபைலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இது தானியங்கி மெசேஜ் அனுப்பி முறையில் இயங்கும் எண்ணாகும். மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு, 10 இலக்க பயணி எண் அனுப்பினால் போதும், இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்துவிடும். 

வாட்ஸ்அப் மூலமாக இரயில் விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி?
முதலில் +91-9881193322 என்ற எண்னை மொபைலில் Railofy என்று பதிவு செய்ய வேண்டும்
பின்பு, வாட்ஸ்அப் செயலிக்குச் சென்று உங்களுடைய தொடர்புகள் (Contacts) புதுப்பிக்க வேண்டும்
இப்போது +91-9881193322 என்ற எண்ணானது உங்கள் வாட்ஸ்அப்பில் தோன்றும்
Railofy சேட் திறந்து அதில், உங்கள் PNR எண்னை உள்ளிட வேண்டும்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் PNR டிக்கெட் நிலை திரையில் தோன்றும்.
அத்துடன்,  ரயில் விவரம், ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது, அடுத்த ரயில் நிலையம் எது, அடுத்த ரயில் நிலையத்திற்கு எப்போது வரும் உள்ளிட்ட விவரங்களும் தோன்றும்
 

click me!