Flipkart Diwali Sale 2022 என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்... திருந்துமா Flipkart?

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 10:42 PM IST

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சிறப்பு விற்பனையில், பல ஏமாற்று மோசடி வேலைகள் நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில், மீண்டும் பண்டிகை கால சிறப்பு விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
 


பண்டிகை காலங்களை ஒட்டி ஃப்ளிப்கார்ட் நிறுவனம் எக்கச்சக்கமான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து, கடும் விளம்பரங்கள் செய்தது. சிறப்பு விற்பனை தொடங்கியதும், பல வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்தனர், ஆனால், சிறிது நேரத்திலேயே ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட சிக்கலால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. 

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் டுவிட்டரில் பிளிப்கார்ட்டை டேக் செய்து புகார் அளித்தனர். அதன்பிறகு, தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் புகாரளித்து, பிளிப்கார்ட்டை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை எழுப்பினர். இதனிடையே விலையுர்ந்த டிரோன் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு, 100 ரூபாய் பொம்மை அனுப்பி ஏமாற்றப்பட்டது. 

Latest Videos

undefined

இப்படி எக்கச்சக்க புகார்கள் பிளிப்கார்ட் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் தீபாவளி சேல்ஸ்கான டீசரை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஃப்ளிப்கார்ட் தீவாளி சேல்ஸ் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ப்ளஸ் மெம்பர்களாக இருந்தால் ஒரு நாள் முன்னரே இந்த தள்ளுபடி விலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸில் வழங்கியது போலவே இந்த தீபாவளி சேல்ஸ்களுக்கும் AXIS மற்றும் ICICI கார்டு வாடிக்கையாளர்களுக்கு உடனடி சலுகையாக 10% தள்ளுபடி அறிவித்து உள்ளது. இந்த தீபாவளி சேல்ஸில் போகோ மற்றும் ஏசுஸ் நிறுவனங்களின் மொபைல்களுக்கு அசத்தலான தள்ளுபடிகள் இருக்கலாம்.

ஆர்டர் செய்த பொருளை ரிட்டனர் செய்யும் பொருட்களுக்கும், பாதுகாப்பான டெலிவரிக்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விலையுர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தி, பாதுகாப்பான டெலிவரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

click me!