எது பெஸ்ட் ? ஸ்மார்ட் போனா ? பீச்சர் போனா ?

 |  First Published Jan 27, 2017, 5:34 PM IST



இந்தியாவை  பொறுத்தவரையில், ஸ்மார்ட்போனின்  விற்பனை   தொடர்ந்து  அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதே வேளையில் பீச்சர்போன் விற்பனையும்  அதிகரித்து காணப்படுகிறது.

காரணம் :

Tap to resize

Latest Videos

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களை விட , பீச்சர் போன் உபயோகம்  செய்பவர்கள்  தான்  இந்தியாவில் அதிகம் .அதாவது, 85 சதவிகிதம் பேர் இன்றும் ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்புவதில்லை  என  ஆய்வில் தெரியவந்துள்ளது.

பீச்சர் போன்

85 சதவிகிதம் பேர் இன்றும் ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்புவதில்லை காரணம்

அதிக தரம், பேட்டரி பேக்கப் மற்றும் குறைந்த விலை உள்ளிட்டவையே சிறந்த  காரணம்  என  கூறப்படுகிறது .இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கைப்பேசிகளில் பீச்சர்போன்கள் மட்டும் சுமார் 55 சதவிகிதம் என்பது  குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம்  வைத்திருக்கிறார்கள் :

இந்தியாவில் பீச்சர் போன் வைத்திருப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்கள் : 

இதுவரை 70 பிரான்டுகள் பீச்சர் போன்கள்  சந்தையில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக விற்பனை செய்து வருகின்றன. இதில் லாவா, இன்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உள்ளிட்ட நிறுவனங்கள் 57  சதவீத  பீச்சர்  போனை  தயாரித்து  புழக்கத்தில்  விட்டுள்ளது.

எனவே இந்தியாவை பொறுத்தவரையில்,  பீச்சர் போன்களுக்கு என்றுமே  வரவேற்பு  உண்டு.....

 

 

 

 

click me!