500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ன அறிவித்த பின்பு, மக்கள் தங்களிடம் உள்ள அனைத்து பணமும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர்.
பின்னர், தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.இதற்கான மத்திய அரசின் புதிய பீம் செயலியை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டார்.
1.1 கோடி பேர் டவுன்லோடு:
இந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்ட இருபதே நாட்களில் சுமார் 1.1 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.
தமிழ் மொழி:
இந்த செயலியில் 2.1 பதிப்பில் தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
எந்தெந்த மொழி:
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பெங்காலி, ஒடியா மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ‘Pay to Aadhaar Number’ என்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றம் கூட செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது.
SPAM என்ற அம்சம் :
யாரேனும் பணம் கேட்டு தொல்லை செய்தால் அதனை முடக்க SPAM என்ற அம்சம் இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளதால் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (National Payments Corporation of India) தயாரித்துள்ள இந்த செயலியானது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மட்டுமே தற்போது வரை இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.