வந்துவிட்டது முதுகில் மாட்டும் மினி கம்ப்யூட்டர்...! எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் ...!!
உலகமே கணினி மையம் தான் . கணினி இல்லையென்றால் ஒரு துரும்பும் அசையாது. அந்த அளவுக்கு பயன்பாடு அதிகரித்துள்ளது தற்போதைய காலக்கட்டத்தில்.
முதுகில் மாட்டும் மினி கம்ப்யூட்டர்.......!!
முதுகில் மாட்டிச் செல்லக்கூடிய வகையில் பை போன்ற புதிய பர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது ஜோட்டக் நிறுவனம்.அதாவது இதனை மினி கம்ப்யூட்டர் என்றும் கூறலாம் .
வடிவமைப்பு :
அதாவது கம்ப்யூட்டருக்குத் தேவையான சிபியூ பை வடிவில் உள்ளது. அதனால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். மேலும் இதனுடன் கிராபிக்ஸ் கார்டுகள் வழங்கப்படும். இந்த சிபியூ-வில் மூன்று யுஎஸ்பி இணைப்புகள் உள்ளன. இதிலிருந்து பேட்டரியை எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாடர்ன் உலகத்தில் வாழவ்தற்கு ஏற்றவாறு இந்த மினி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.